கோர்ட்டில் ஆஜரான ஈபிஎஸ்... `டிக்' அடித்த மாஜிஸ்திரேட் - வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக முதல் சம்மனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய சென்னை தி.மு.க. எம்.பி தயாநிதி மாறன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான மனுவில், தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை தான் பயன்படுத்தவில்லை என உண்மைக்கு புறம்பாக பிரசாரத்தின்போது ஈ.பி.எஸ். பேசி இருப்பதாகவும், அவதூறு நடவடிக்கை எடுத்து அவரைத் தண்டிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த மனு, எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் சக்திவேல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளதாக அ.தி.மு.க. வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.