"ஆஸ்பத்திரி வார்டில் கூட தங்க முடியவில்லை" ஒரு இரவு பெய்த மழை.. மருத்துவமனையை சுற்றி வளைத்த நீர்

x

ராமநாதபுரம் மாவட்டத்தில், இரவு முழுவதும் பெய்த கனமழையால், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு பிரிவு கட்டிடத்திற்கு செல்லக்கூடிய பகுதிகள், மழைநீரால் நிரம்பியது. இதனால், குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, உதவிக்காக வந்தவர்கள் இரவு முழுவதும் தங்குவதிற்கு இடமில்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், மருத்துவமனை வளாகத்திற்குள் இரத்த பரிசோதனை உள்ளிட்ட மற்ற பிளாக்குகளுக்கு செல்பவர்களும், முழங்கால் அளவு மழைநீரில் நடந்துசெல்லும் நிலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்