"பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"...அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், புதிய நரம்பியல் பிரிவு கட்டிடத்திற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில், பயிற்சி ஆய்வகங்கள், விடுதி அறைகள் உள்ளிட்டவறை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையின்போது சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, அவர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், புதிதாக நியமிக்கப்பட்ட 1021 மருத்துவர்களில் கர்ப்பிணிகளாகவும், பிரசவித்த தாய்மார்களாகவும் இருப்பவர்கள், பணியில் சேர்ந்து விட்டு பிரசவ கால விடுப்பை எடுத்து கொள்ளலாம் என்றார்.
Next Story