வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

x

திருப்பூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாடகை செலுத்தப்படாத 169 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில், கடந்த 2021 - ஆம் ஆண்டில் இருந்து வாடகை செலுத்தாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள், வாடகை செலுத்தாத 169 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்து சுமார் ரூ. 9 கோடி வரை வாடகை பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்