"தகுதி இல்லாத 30,000 பேருக்கு ரூ. 50 கோடி வரை நிவாரணம்.. அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்

x

தகுதி இல்லாத 30,000 பேருக்கு ரூ. 50 கோடி வரை நிவாரணம்.. அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்

கொரோனா கால கட்டத்தில் அரசு வழங்கிய பலன்களை தகுதியில்லாத 30 ஆயிரம் பேர், 5 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பதாக முதன்மை தலைமை கணக்காயர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய கணக்கு தணிக்கை துறையின் மூன்று அறிக்கைகள் சட்டப்பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன. இந்த அறிக்கை தொடர்பாக, முதன்மை தலைமை கணக்காயர் ஜெய்சங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இ-டெண்டரில் குடும்ப உறுப்பினர்களே வெவ்வேறு ஏலதாரர்களாக பங்கேற்றதும், வெவ்வேறு ஏலதாரர்கள் ஒரே ஐ.பி. முகவரியிலிருந்து ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்திருப்பதும் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்டுமான தொழிலாளர்கள் குறித்த புள்ளி விவரங்களை அரசு சரியாக கையாளவில்லை என கூறிய அவர், கட்டுமானங்களை பொறுத்தவரை மதிப்பீட்டை குறைத்து பதிவு செய்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு இழப்புகள் அதிகமாக ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மதுபான சில்லறை கடைகளில் நிறுவப்பட்டுள்ள 5 ஆயிரத்து 359 பி எஸ் ஓ கருவிகளில், 3 ஆயிரத்து 114 மட்டுமே செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பதாக புகார்கள் வந்திருப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்