"மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்"

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்...
x

வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்- ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும்.

அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்