கூட்டுறவு சங்க தேர்தல் - அமைச்சர் சொன்ன தகவல் | pudukottai
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதில் எந்த தயக்கமும் இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், ரகுபதி மற்றும் மெய்ய நாதன் கலந்து கொண்டு 60 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், கடந்த ஆட்சியில் தவனை முறையில் தேர்தல் நடத்தியதாகவும், வாக்களர் பட்டியலை சரி செய்தபின் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தபடும் என்றும் கூறினார். இன்னும் 170 சங்கங்களுக்கு ஜனவரி மாதம் வரையில் பதவிகாலம் உள்ளதாக கூறிய அவர், விரையில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தபடும் என்றார்.
Next Story