ராட்சத பாறை விழுந்து மலை ரயில் பாதை சேதம்.. சுற்றுலா பயணிகள் அவதி | Coonoor

x

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே ராட்சத பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் சென்ற ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் குன்னூர் ரயில் நிலையத்திற்கு மலை ரயில் சென்றடையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்