"குன்னூர் கோர விபத்துக்கு காரணம்..." காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட் | coonoor bus accident

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதற்கு, ஓட்டுநரின் அஜாக்கிரதைதான் காரணம் என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த 59 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2 ஓட்டுனர்கள் என 61 பேர் பேருந்தில் பயணித்த‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உதகையை சுற்றிப் பார்த்துவிட்டு, மேட்டுப்பாளையம் செல்வதற்காக குன்னூர் அருகே செல்லும்போது, ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்த‌தாகவும், விபத்தில் 9 பேர் உயிரிழந்த‌தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 பேர் காயமடைந்து கோவை, உதகை மற்றும் குன்னூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பந்தமாக குன்னூர் காவல் நிலையத்தில், வாகனத்தின் உரிமையாளர் சுப்பிரமணி, ஓட்டுநர்கள் முத்து குட்டி, கோபால் மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் மீது 3 பிரிவினரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்