குன்னூர் விபத்து - இந்து முன்னணியினர் மவுன அஞ்சலி

x

குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு தென்காசி மாவட்டம் கடையத்தில் மோட்சதீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் சிக்கிய 9 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்நிலையில், கடையத்தில் இந்து முன்னணியினர் 200 -க்கும் மேற்பட்டோர், இறந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி, மோட்ச தீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்