பெட்டிக்கடையில் 10 ரூபாய் கூல் ட்ரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி மூக்கில் நுரை தள்ளி மரணம்

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த 5 வயது சிறுமி, வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு 5 வயதான காவியா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். காவியா ஸ்ரீ நேற்று முன் தினம் வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய்க்கு குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார். அதனை குடித்த சிறுது நேரத்திலேயே சிறுமி காவியாஸ்ரீக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியதோடு, மயங்கியும் விழுந்துள்ளார். உடனடியாக சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி காவியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜ்குமார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், தனது மகள் மரணத்திற்கு மலிவு விலை குளிர்பானமே காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்