விஷமாக மாறிய ரூ.10 கூல்ட்ரிங்ஸ் குடித்த 10 வது நிமிடமே சுருண்ட மகன்"என் புள்ள லைஃபே போச்சு.."கதறும் தாய் தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி...

x

10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்து மயங்கி விழுந்த சிறுவன், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்..

அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் இவர், தந்தையை இழந்து தாய் கிருஷ்ணவேணியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்..

இந்நிலையில், வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில், சிறுவன் பத்து ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்ததாக தெரிகிறது..

குடித்த பத்தாவது நிமிடத்திலே, சிறுவன் மயங்கி விழுந்ததாகவும், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனின் அம்மாவிற்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது..

சிதம்பரம் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் குடித்த 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் சோடியம் கார்ப்போ ஹைட்ரேட் வேதிப்பொருள் கலந்திருப்பதாகவும், இதனால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்..

அங்கு, சிறுவனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அனுமதித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

கணவரை இழந்து, ஒற்றை ஆளாய் இரு மகன்களை வளர்த்து வந்த பெண்மணியின் இந்த கதறல் மனதை பதற வைத்து, பெற்றோர்களை அச்சமடைய செய்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்