சர்ச்சை சாமியார் அன்னபூரணிக்கு 3-வது திருமணமா?
- சர்ச்சை சாமியார் அன்னபூரணி 3-வது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- பிரபல சர்ச்சை சாமியாரான அன்னபூரணி தற்போது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் ஆன்மீக சக்தி பீடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருகிற நவம்பர் 28 அன்று ரோகித்தை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது திருமணத்திற்கு சர்ச்சை சாமியார் முடிவெடுத்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
Next Story