"காடு, மரம், ஆறு, நீர்நிலைகளை பாதுகாப்பது சனாதனம்" - வெங்கையா நாயுடு
சென்னை தியாகராய நகரில், ஹரிஜன் சேவக் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வெங்கையா நாயுடு, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தையும், அறக்கட்டளை சார்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் உரையாற்றிய வெங்கையா நாயுடு, சனாதனம் என்பது பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வந்த ஒன்றாகும் என தெரிவித்தார். பெரியோர்களை மதிப்பது, இயற்கையை போற்றி பாதுகாப்பது, காடு, மரம், ஆறு, நீர்நிலைகளை பாதுகாப்பதே சனாதனம் என்றும் தெரிவித்தார். அமைதி மூலமே அனைத்தையும் சாதிக்க முடியும் - போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
Next Story