அடுத்துடுத்த கைதிகள் தற்கொலை முயற்சி =ஒருவர் பலி/புதுக்கோட்டையில் அடுத்துடுத்து சிறைக் கைதிகள் தற்கொலை முயற்சி =ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மற்றொரு நோயாளி படுக்கையில் சாம்பிலுக்காக வைக்கப்பட்டிருந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினை விசாரணை செய்து அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்பி உத்தரவு இதேபோன்று சிறைத்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
தஞ்சையைச் சேர்ந்த ரமேஷ் 46 வயது உடையவர் இவர் தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இவருக்கு கடந்த ஐந்தாம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறையில் இருந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் முதலில் கைதி வார்டில் தான் சிகிச்சை பெற்று வந்தார்
நிலைமை மோசமாகவே அவரை மற்ற சாதாரண நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஐ சி யு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
வெளியில் காவலுக்கு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
இந்த நிலையில் நேற்று காலை ஐசியூ வார்டில் ஏற்கனவே பாய்சன் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குறித்த பாய்ஸ்சனை சாம்பிளுக்கு காவல்துறைக்கு கொடுப்பதற்காக அவரது உறவினர்கள் வைத்திருந்தனர்
ஏற்கனவே போகோ சட்டத்திற்கு கைது செய்யப்பட்ட ரமேஷ் மனவிரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து பக்கத்து நோயாளி படுக்கையை வைக்கப்பட்டிருந்த பாய்சனை திடீரென்று அவர் எடுத்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார் இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அது தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்
இந்த நிலையில் ஐசியூ வார்டு முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காவலர்கள் அஜாக்கிரதையாக பணியாற்ரி உள்ளது காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்
விசாரணை அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்களுக்கு சஸ்பெண்ட் நடவடிக்கை அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இதேபோன்று சிறை துறை அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்