திடீர் என்ட்ரி கொடுத்த காங்கிரஸ் எம்.பி. - நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு
காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பழுதாகி நிற்கும் எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட்டுகளை ஆய்வு செய்த அவர், பராமரிப்பின்றி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை திறந்து வைக்க உத்தரவிட்டார். ரயில் பயணிகளின் அடிப்படை தேவைகளை அவ்வப்போது கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் நெல்லை ரயில் நிலையத்தை தனிக் கோட்டமாக அறிவிக்க கோரியும், பகலில் நெல்லையில் இருந்து சென்னைக்கு பாசஞ்சர் ரயில் இயக்க கோரியும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக ராபர்ட் ப்ரூஸ் தெரிவித்தார்.
Next Story