"காங்கிரஸ் பயம் காட்டுகிறது" - பிரதமர் மோடி கடும் விமர்சனம்
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ், சமாஜ்வாடி குறித்து கூட்டத்தில் இருந்த மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மக்களின் சொத்துக்களில் ஒரு பகுதியை, வாக்கு ஜிகாத் செய்யும் வாக்கு வங்கிக்கு கொடுத்துவிடுவார்கள் என்றார். பாகிஸ்தானில் அணுகுண்டு இருப்பதால் நாம் பயப்பட வேண்டும் என காங்கிரஸ் மிரட்டுகிறது என சாடிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கே சென்று தாக்குதல் நடத்தினோம், அதற்கு பிறகு நம்மை ஏதேனும் செய்ய அவர்களுக்கு தைரியம் வந்ததா என கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக கூறும் காங்கிரசுக்கு, அந்த அணுகுண்டுகளை பராமரிக்க பாகிஸ்தானிடம் பணம் இல்லை என்பது தெரியவில்லையே என்றும் விமர்சித்தார்.
Next Story