முக்கிய கட்டம்... சோனியா வெளியிட்ட திடீர் காணொலி | Sonia Gandhi
டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் பிரசாரம் ஓயும் வேளையில், இந்தியா கூட்டணியை வெற்றிப்பெற செய்ய வாக்களிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொலியில், இது நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் முக்கியமான தேர்தல் என குறிப்பிட்டுள்ளார். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அரசியல்சாசன அமைப்புகள் மீதான தாக்குதல் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த இந்த போரில், மக்களும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பொன்னா எதிர்காலத்தை கட்டமைக்க இந்தியா கூட்டணியை வெற்றிப்பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story