"உறுதி காட்டும் பாஜக" - நெல்லை மண்ணில் நின்று பிரதமர் சொன்ன வார்த்தை

x

#nellai | #pmmodi | #electioncampaign

"உறுதி காட்டும் பாஜக" - நெல்லை மண்ணில் நின்று பிரதமர் சொன்ன வார்த்தை

தமிழகத்தை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதற்கு பாஜக விரும்புகிறது என்று, நெல்லை பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நெல்லை அகஸ்தியர்பட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அம்பாசமுத்திரம் வந்தடைந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து காரில் அகஸ்தியர்பட்டியை வந்தடைத்தார்.

பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, தமிழகத்தில் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது என்றும்,

தமிழ் மொழியை உலகளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி பூண்டுள்ளது என்றும் கூறினார்.

வந்தே பாரத் ரயிலை போன்று தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விடப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தை சுய சார்பு மாநிலமாக மாற்ற வ.உ.சி. விரும்பினார் என்றும், அதுபோல, தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற பாஜக விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன், தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன், விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார், கன்னியாகுமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்


Next Story

மேலும் செய்திகள்