3 பேருக்கு மறுபிறவி கொடுத்த கல்லூரி மாணவர்..மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்
பரத்குமார் என்ற கல்லூரி மாணவர் கடந்த 24ம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்... மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்... உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு பரத்திடம் இருந்து மருத்துவ குழுவினர் 2 சிறுநீரகங்கள் மற்றும் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது... சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும், விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டன... தான் இறந்த போதிலும் மாணவர் பரத் குமார் 3 பேரை வாழ வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.