புறாக்களுக்கு சுதந்திரம் அளித்த கலெக்டர்கள்
புறாக்களுக்கு சுதந்திரம் அளித்த கலெக்டர்கள்
நெல்லை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். 60 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் சங்கீதா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சமாதானப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். தியாகிகள் அமர்ந்த பகுதியில், நிழற்பந்தல் அமைக்கப்படாததால் கடும் வெயிலில் தவித்தனர்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். 499 அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் சமாதான புறாவை பறக்கவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சுதந்திர தின விழா காவல்துறை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் தேசியக் கொடி ஏற்றினர். பின்னர் மூவர்ணக் கொடியில் பலூன்களை பறக்கவிட்டனர்.