கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு - மீட்கப்பட்ட அரசின் ரூ.200 கோடி
கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு - மீட்கப்பட்ட அரசின் ரூ.200 கோடி
சென்னையை அடுத்த பரங்கிமலை, பட்ரோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகை காலம் முடிந்த பின்னரும் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல் இருந்துள்ளனர்... வணிக நோக்கில் ஒப்படைக்கப்படாத அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டார்... வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பரங்கி மலை ராணுவ மையத்தின் அருகே உள்ள கடைக்கு சீல் வைத்து அரசு நிலத்தை மீட்டனர். பரங்கிமலை பட்ரோட்டில் பகுதிகளில் இதுவரை குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story