வேலூர் ஆவின் பால் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

x

சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளில் பால் எடை அளவு குறைந்திருப்பதாககவும், முறைகேடு நடந்திருப்பதாகவும் பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. மேலும், பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத் தைலவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த, ஆவின் பால் உள்ளிட்ட பொருட்கள் சரியான எண்ணிக்கையில், முறையான ஆவணங்களுடன் உள்ளனவா என ஆய்வு செய்தார். தொடர்ந்து, உற்பத்தி பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டடார். மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வால் ஆவின் பால் பண்ணையில் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்