கடலுக்குள் சென்று கலெக்டர் பாண்டியன் செய்த தரமான சம்பவம்.. இணையத்தை கலக்கும் வீடியோ

x

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் அர்ஜூன் பாண்டியன். அதிகாலை வேளையில், அழிக்கோடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்ற ஆட்சியர் அர்ஜுன் பாண்டியன், மீனவர்களுடன் கடலுக்கு சென்று, அவர்களுடன் இணைந்து, வலையில் மீன்பிடித்து மகிழ்ந்தார். மேலும், மீனவர்களின் தொழில் உள்ள சிரமம் குறித்து கலந்துரையாடிய ஆட்சியர், 5 மணி நேரங்கள் கழித்து கரைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பகுதி மீனவர்களுக்கு திருவோண வாழ்த்துக்களை தெருவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.


Next Story

மேலும் செய்திகள்