``கலெக்டரையே அடிப்பேன்..'' அதிர வைத்த பகீர் ஆடியோ... கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானலில், மாவட்ட ஆட்சியரையே அடிக்கப் போவதாக பேசிய ஜே.சி.பி. ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொடைக்கானலில் ஜேசிபி, ஹிட்டாச்சி, பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சில தினங்களுக்கு முன், கல்லறை மேடு பகுதியில் இதுகுறித்து வருவாய்துறையினர் எச்சரித்த நிலையில், ஜே.சி.பி மற்றும் ஹிட்டாச்சி ஆபரேட்டர்களான சத்யராஜ் மற்றும் தினேஷ் மதுபோதையில் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஒருகட்டத்தில் சத்யராஜ், யார் வந்தாலும் அடிப்பேன்... கலெக்டரே வந்தாலும் அடிப்பேன் என பேசியது சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...
Next Story