கோவையில் பேரதிர்ச்சி.. குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பெண்கள்
குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், பீகார் மாநில தம்பதியை 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் அப்ப நாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனை தொடர்பாக பீகாரை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், குழந்தைகளை வாங்கிய 2 பேரையும் கைது செய்தனர். இரு குழந்தைகளையும் சைல்ட் லைன் அமைப்பின் மூலம் போலீசார் பராமரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோரி மனு அளித்தனர். அதனை பரிசீலித்த நீதிபதி, 2 நாள் காவல் வழங்கி அனுமதி அளித்தார். இதனையடுத்து கைதானவர்களை காவலில் எடுத்த போலீசார், வேறு யாரேனுக்கும் இதுபோல் குழந்தையை விற்பனை செய்துள்ளனரா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story