கோவை மாசு கட்டுப்பாடு - வெளியான முக்கிய தகவல்

x

கோவையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட அதிகபட்ச மாசு அளவு,197 ஆக இருப்பதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கோவையில் கவுண்டம்பாளையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் காற்று மாசு அளவீடு செய்யப்பட்டது.

இதில் கவுண்டம்பாளையம் பகுதியில் மாசு அளவு 187 ஆகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசு அளவு 197 ஆகவும் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சம் 200 க்கு மேலாக இருக்கும் காற்றின் அளவு மோசமானது என இருக்கும் நிலையில், கோவையை பொறுத்தவரை மாசு அளவு அபாயகரமாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்