"நிறுவனத்தில் மீண்டும் முதலீடு உஷார்" - கோவை காவல் துறை எச்சரிக்கை
குறைந்த செலவில் வீடு வாங்கி தருவதாகவும், மெக்கா அழைத்துச் செல்வதாகவும் கூறி தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பண மோசடி செய்ததாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண்கள் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த தெத்தி தர்மர் நகர் பகுதியை சேர்ந்தவர் பானு. பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், அதே பள்ளியில் பணிபுரிந்த ஊழியர்களிடம் குறைந்த செலவில் வீடு வாங்கி தருவதாகவும், மெக்கா அழைத்துச் செல்வதாகவும் கூறி பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை நம்பி அப்பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் தொடங்கி ஊழியர்கள் வரை பல லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே போலீசில் புகாரளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளிரிடம் புகாரளித்த நிலையில், அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி எஸ்பி உறுதியளித்தார்.