கோவையில் அதிசய கிராமம்... தரிசை தங்கமாக்கிய சுயேச்சை... தமிழகத்துக்கே வழிகாட்டும் கிட்டாம்பாளையம்

x

தன் ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்றும் நோக்கில்... ஊராட்சி மன்ற தலைவர் ஒருவரின் விவசாயம் சார்ந்த முன்னெடுப்பு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது....

தரிசு நிலத்திற்கு விவசாயம் மூலம் உயிர் கொடுத்து, அதில் முப்போகம் காய்கறி சாகுபடியும் செய்து அசத்தி வருகின்றனர் கோவை, கிட்டாம்பாளையம் கிராம மக்கள்...

சுமார் இரண்டரை ஏக்கர் தரிசு நிலத்தில் வெங்காயம் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்திருக்கும் இவர்கள், அதனை மலிவு விலையில் விற்று பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்...

சிறந்த ஊராட்சிக்கான விருதை, தமிழக அரசிடம் இருந்து கிட்டாம்பாளையம் ஊராட்சி, அண்மையில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது...

இந்த ஊராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரின் முன்னெடுப்புதான் அத்தனைக்கும் காரணம்...

ஊராட்சி முழுவதும் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டு, அதனை பராமரித்து வரும் சூழலில் தற்போது ஓடை கற்கள் நிறைந்த இரண்டரை ஏக்கர் தரிசு நிலத்தை தேர்ந்தெடுத்து... அதில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உதவியுடன் வெங்காயம், எலுமிச்சை, மிளகாய் போன்றவைகளை பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார்...

முதலில் வந்த லாபத்தில் சொட்டு நீர் பாசனம்... இரண்டாவதாக வந்த லாபத்தில் ஊராட்சி மன்றக் கணக்கில் 45 ஆயிரம் ரூபாய் வரவு... ஒரு நிலத்தில் ஒரே பயிரை மூன்று முறை பயிரிட முடியாது என்ற வழக்கத்தை பொய்யாக்கி இருக்கிறோம்... என வார்த்தைகளிலும், செயலிலும் தன்னம்பிக்கை துளிர்விடும் கிட்டாப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் இந்த முன்னெடுப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்