கோவை பிரபல தொழிலதிபர் வீட்டில் ரெய்டு.. கட்டு கட்டாக சிக்கிய பணம்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருபவர் பெரோஸ்கான். கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இவர், சைனா மொபைல் டீலராகவும் இருந்து வருகிறார் . இந்நிலையில் இவர் முறையான வருமான வரி செலுத்தாமல் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கானின் இல்லத்திலும் இன்று சோதனை நடந்தது. அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 4 கோடியே 10 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவருடைய வீட்டில் ஏர்கன் வகையிலான கை துப்பாக்கி இருப்பதை பார்த்த அவர்கள் இதுகுறித்து கோவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பெங்களூர் தொழிலதிபரின் கோவை இல்லத்தில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.