விடுதலையானதும் சிறை வாசலிலே மீண்டும் மகனை கைதுசெய்த போலீஸ்.. கட்டிப்பிடித்து கதறிய காத்திருந்த தாய்

x

ஈரோடு அருகே உள்ள சோலார் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், கடந்த மே மாதம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கோவை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். கடந்த 3 மாதங்களாக கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை, தாய் சுமதி நீதிமன்றம் சென்று ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். சிறையில் இருந்து அழைத்து செல்வதற்காக வெளியே தாய் காத்திருந்தார். சிறை கேட்டை திறந்து மணிகண்டன் வெளியே வந்தவுடன், அவரை மற்றொரு வழக்கில் கைது செய்த போலீசார் அவரை காரில் ஏற்ற முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சுமதி, மகனை கட்டி பிடித்து கொண்டு கதறி அழுதார். ஆனால், போலீசார் அவரை சட்டையை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு வேகமாக புறப்பட்டனர். தடுக்க முயன்ற சுமதியின் காலில் கார் சக்கரம் ஏறியதில் காயமடைந்த சுமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்