1 வருடத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள்... ஒரே நாளில் நிறைவேற்றிய கோவை மாநகராட்சி...

x

கோவை மாநகராட்சியில், விவாதமின்றி ஒரே நாளில் 333 தீர்மானங்கள் ஆல்பாஸ் முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 2022-23-ல் 10 மாமன்ற கூட்டங்கள் நடத்தி 329 பொருள்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் பல கோப்புகளை நிலுவையில் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஒரு ஆண்டில் விவாதிக்கப்பட வேண்டிய 333 பொருள்கள், நேற்று நடைபெற்ற ஒரே கூட்டத்தில் விவாதமின்றி, ஆல்பாஸ் முறையில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்