ரூ.3 கோடி வரி செலுத்தாத கோவை காலேஜ்...கையில் வேலுடன் பங்கம் செய்த கவுன்சிலர்
ரூ.3 கோடி வரி செலுத்தாத கோவை காலேஜ்...கையில் வேலுடன் பங்கம் செய்த கவுன்சிலர் - அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்
கோவையில் தனியார் கல்லூரி செலுத்த வேண்டிய 3 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாக வேண்டி, பேரூராட்சி கவுன்சிலர் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். திருமலையம்பாளையம் பேருராட்சி கவுன்சிலராக இருப்பவர் ரமேஷ்குமார். இவர், கையில் வேல் மற்றும் பேனருடன் பழனிக்கு 100 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக நடந்து சென்றார். அந்த பேனரில், பேரூராட்சி நிர்வாகத்திற்கு தனியார் கல்லூரி நிர்வாகம் செலுத்த வேண்டிய 3 கோடி ரூபாய் சொத்துவரியை செலுத்த வேண்டி பாதயாத்திரை செல்வதாக அச்சிட்டுள்ளார். பல முறை வலியுறுத்தியும் சொத்துவரியை கல்லூரி நிர்வாகம் செலுத்தவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்
Next Story