இரவெல்லாம் தவித்த பயணி... பிரபல செயலிக்கு அதிரடி அபராதம்... நீதிமன்றம் அதிரடி

x

2023 ஆகஸ்டில் பெங்களூருவில் இருந்து கோவை செல்ல,

ரெட் பஸ் செயலி மூலம் முகுந்தன் என்பவர் இரண்டு டிக்கெட்கள் வாங்கியிருந்தார். கலைமகள் டிராவல்ஸ் ஏசி பேருந்தில் இரண்டு இருக்கைகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 90 ரூபாய் செலுத்தியிருந்தார். ஆனால் பயணத்தின் போது தொடர்ந்து மூட்டை பூச்சி கடித்தால் அவரால் இரவு முழுவதும் தூங்க இயலவில்லை. இது தொடர்பாக

ரெட்பஸ் நிறுவனத்திற்கு முகுந்தன் நோட்டீஸ் அனுப்பியும் முறையான பதில் கிடைக்காததால், இழப்பீடு கோரி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், சேவை குறைபாடு செய்துள்ளதால் மனுதாருக்கு டிக்கெட் தொகை 2 ஆயிரத்து 90 ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மன உளைச்சலுக்கு இழப்பீடாக 5 ஆயிரம் ரூபாயும், செலவு தொகை 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்