கோவை குண்டுவெடிப்பு வழக்கு..! சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு | Kovai Bomb Blast
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா உள்பட ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாத கால ஜாமின் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை நீட்டிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அல் உம்மா பாஷா உள்பட ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர். இதேபோல கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ள முகமது அசாம் உள்பட 13 பேருக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
Next Story