காபி வித் கலெக்டர் - புதுக்கோட்டை ஆட்சியரின் புது முயற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி உள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் மிரட்டுநிலை அரசு பள்ளியில் மாணவர்கள் கலந்து கொண்டு இனிப்பு, கார வகைகளை சாப்பிட்டு கொண்டே கலெக்டருடன் உரையாடினர். பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றால் கலெக்டராக ஆக வேண்டும் என்று சிறுவயதில் மனதில் ஏற்பட்ட தாக்கமே என்னை ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்கியது என மாணவரின் கேள்விக்கு ஆட்சியர் மெர்சி ரம்யா பதிலளித்தார்.
Next Story