"மக்களுடன் முதல்வர்" இரண்டாம் கட்ட முகாம்கள் - புதிய திட்டத்தின் அப்டேட் வெளியிட்ட தமிழக அரசு

x

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சிறப்பு முகாம்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, கோவை மாநகரில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் கடந்த 5 மாதங்களில், தமிழ்நாடு முழுவதும், மொத்தம் 2 ஆயிரத்து 58 முகாம் நடத்தப்பட்டு, 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த முகாம்களை நடத்தி, முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15க்குள் தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்