மின்சாரம் தாக்கி இருவர் பலி.. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்

x

கோவை மாவட்டம் உடையம்பாளையத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடையம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டினில், புதிய தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை பார்த்தபோது, வடமாநில தொழிலாளியான மனோஜ் மீது மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற மேஸ்திரி, குமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்