விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த முதல்வர் ஸ்டாலினின் அரசாணை
விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த முதல்வர் ஸ்டாலினின் அரசாணை
மாநிலம் முழுவதும் நீர்த்தேக்கங்களில் இருந்து கட்டணமின்றி வண்டல் மற்றும் களிமண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரசாணையில், மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரி, கண்மாய், குளங்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று வண்டல் மற்றும் களி மண் எடுத்து கொள்ளலாம் எனவும், விவசாயிகள் மற்றும் பானை செய்வோரின் வேண்டுகோளை ஏற்று, விவசாயப் பயன்பாட்டிற்கும், பானைத் தொழில் செய்வதற்கும் தேவையான மண் எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இது மட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.