முதல்வர் ஸ்டாலின் சொன்ன வாழ்த்து... பூரித்துபோன ஆசிரியர்கள்

x

முதல்வர் ஸ்டாலின் சொன்ன வாழ்த்து... பூரித்துபோன ஆசிரியர்கள்

தமிழ் நாட்டில் 55 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின், கனவு ஆசிரியர் விருது பெற்ற 55 ஆசிரியர்கள் பிரான்சு நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தனது எக்ஸ் தள பக்கத்திலும் அதனை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் இது பற்றி விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சருக்கும் இந்த திட்டத்தில் துணை நிற்பவர்களுக்கும் எக்ஸ் தள பக்கத்தில் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கல்விச் சுற்றுலாவின் மூலம் 236 மாணவர்களும், 92 ஆசிரியர்களும் வெளிநாடு சென்று வந்திருப்பது, தனது நெஞ்சத்தை நிறைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்