வலுவிழந்தது! - இந்திய வானிலை மையம்சொன்ன - V.குட் நியூஸ்
ஜூன் மாதத்தில் தொடங்கும் தென் கிழக்கு பருவ மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய மொஹபத்ரா கூறியுள்ளார். பருவ மழை பொழிவுக்கு தீங்கு செய்யும் எல் நினோ வலுவிலந்து வருவதாகவும், ஜூன் மாதத்தில் அது சமநிலைக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மத்திய பசிபிக் கடல் பகுதியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் எல் நினோ, இந்தியாவில் பருவ மழை பொழிவுகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவது வழக்கம். மத்திய பசிபிக் கடல் பகுதியில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் லா நினோ ஜூலையில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். லா நினோ இந்திய பருவ மழை பொழிவுக்கு பெரும் நன்மை செய்யும் என்றார். இந்த ஆண்டில் வெண்பனி பொழிவு குறைவாக உள்ளது மற்றொரு சாதகமான அம்சம் என்றார். இந்தியாவின் மொத்த மழை பொழிவில் 70 சதவீத பங்களிக்கும் தென் கிழக்கு பருவ மழை, விவசாய உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.