சென்னையில் தண்ணீர் லாரியால் பறிபோன 6-ஆம் வகுப்பு மாணவன் உயிர்
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரத்தினம் மற்றும் லட்சுமி. இவர்களது மகன் பேரரசு சித்தாலப்பாக்கம் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று இரவு சிறுவன் சித்தாலப்பாக்கம் இந்திராநகர் செல்லும் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் மாடுகள் இருந்ததால் ஓரமாக நின்றதாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் தண்ணீர் லாரி சிறுவன் மீது மோதி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story