இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மியுடன் உரசல்.. பஞ்சாப்பில் தனித்து களம் காண அம்மாநில காங்கிரஸ் முடிவு
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி இல்லை என அம்மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Vovt
பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது 8 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு எம்பிக்கள் கூட இல்லை. இந்நிலையில், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இருப்பதால், பஞ்சாப்பில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடப்படும் என்று பஞ்சாப் அமைச்சர் ஹர்பால்சிங் சீமா தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டணியில் போட்டியிட்டால், அகாலி தளம் கட்சிக்கு சாதகமாக மாறிவிடும் எனக்கூறி, பஞ்சாப் மாநில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், 13 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனை டெல்லி தலைமைக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.