நடு ரோட்டில் குடிமகன்கள் அட்ராசிட்டி.. தட்டிக்கேட்ட காவலர் கழுத்தில்....செல்போனை பிடிங்கி ஓட்டம்..

x

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் மது குடிக்க‌க்கூடாது என்ற காவலரை, குடிமகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஓமலூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள், அங்கேயே அமர்ந்து குடிப்பது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மது வாங்கி அங்கேயே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த‌தை வெங்கடேஷ் என்ற காவலர் தட்டிக்கேட்டு விரட்டியுள்ளார். அப்போது, குடிமகன்களின் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், காவலருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டு, மோதலில் ஈடுபட்டனர். சட்டையை பிடித்து தள்ளி தாக்கியதோடு, காவலரின் செல்போனையும் பிடிங்கிக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனிடையே, அந்த இளைஞர்களை பிடித்த காவல்துறையினர், பொது இடத்தில் தகராறு செய்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்