வில்லன் நடிகரை பொளந்து கட்டிய ரசிகை - பரபரப்பு

x

வில்லன் நடிகரை பொளந்து கட்டிய ரசிகை - பரபரப்பு

தெலுங்கு திரையுலகில், அண்மையில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் "லவ் ரெட்டி" பட வில்லன் என்.டி.ராமசாமிக்குதான் இந்த நிலைமை..

படத்தில், காதல் ஜோடியை அவர் பிரித்ததாக கூறப்படுகிறது..

மேற்கொண்டு ஹீரோயினை செங்கல்லால் எறிந்து அடிக்கவும் செய்திருக்கிறார்..

இதனை, திரையரங்கில் கண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென திரையரங்குக்குள் லவ் ரெட்டி படக்குழு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்ததையும், அதில் வில்லனாக நடித்திருந்த ராமசாமியை கண்டு வெகுண்டெழுந்ததிலும்தான் இந்த களேபரம்..

திடீரென கூட்டத்திற்குள் ஓடி வந்து என்.டி..ராமசாமியை பெண் ஒருவர் பொளந்து கட்டுவதை பார்த்து பதறிப் போன படக்குழு, உடனே உள்ளே புகுந்து இது சினிமா.. ரியல் அல்ல எனக்கூறி பெண்ணை ஆசுவாசப்படுத்தி இருக்கின்றனர்..

இந்நிலையில், இந்த சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வில்லன் நடிகர்களை சற்று கலவரமாக்கி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்