"கோவில் அருகே தேவாலயம்" நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | Highcourt Madurai Branch
கோவில் அருகே தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சனை என்றும், அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு என கூறினார். இது போன்று கோவில் அருகே தேவாலயம் கட்டுவதால் மத நல்லிணக்கம் தான் ஏற்படும் என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story