கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..8 கிமீ வரை வரிசையில் நிற்கும் வாகனங்கள்

x

வார‌ விடுமுறை மற்றும் கிறிஸ்தும‌ஸ் விடுமுறையை முன்னிட்டு த‌மிழ‌க‌ம் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு மாநில‌ங்க‌ளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வ‌ருகை அதிக‌ரித்துள்ள‌து. குறிப்பாக பிர‌தான‌ மலைச் சாலைக‌ளில் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளின் தொட‌ர் வ‌ருகையால் வெள்ளி நீர் வீழ்ச்சி நுழைவு வாயில் ப‌குதியில் இருந்து புலிச்சோலை, உள்ளிட்ட‌ ப‌குதிகளில் 8 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுந்து ஊர்ந்து செல்கின்றன... இதனால் அவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது... அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, செண்பகனூர், உகார்த்தே நகர், சீனிவாச புரம் உள்ளிட்ட பகுதிகளும் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இது போன்ற தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடி, நகர்ப்பகுதிகளில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவ‌ர‌த்து நெரிச‌லை துரித‌மாக‌ சீர் செய்ய‌ வேண்டும் என‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்... தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்