திடீரென சூலாயுதத்தை தோளில் வைத்து நடனமாடிய முதியவர்.. பரவசமான பக்தர்கள் - சித்திரை திருவிழா கோலாகலம்

x

தமிழகத்தில் சில இடங்களில் சித்திரை மாதத்தையொட்டி தீ மிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே 300 ஆண்டுகளாக நடைபெறும் தேர் தூக்கும் திருவிழாவின் இறுதி நாளான தீமிதி திருவிழா, செவ்வாயன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை அருகே தாமரைகுல மகா மாரியம்மன் ஆலய தீமிதிவில், வயதான பக்தர் ஒருவர் சூலாயுதத்தை தோளில் சுமந்து நடனமாடிய காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.

நாகை அருகே செம்பியன் ஆத்தூரில்திரௌபதி அம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

இராஜபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பூமாரியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா கோலகலமாக நடைபெற்றது. 700 மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்