ஒன்று சேர்ந்த இரு நாட்டு அதிபர்கள்..உற்று நோக்கும் உலக நாடுகள்

x

ஒன்று சேர்ந்த இரு நாட்டு அதிபர்கள்..உற்று நோக்கும் உலக நாடுகள்

சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபிற்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த அவர்,

தைவான், திபெத், தென் சீன கடல் விவகாரங்களில் சீனாவிற்கு பாகிஸ்தான் எப்பொழுதும் முழு ஆதரவு அளிக்கும் என உத்தரவாதம் அளித்தார். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கும் பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அவர் கூறினார். அப்போது பாகிஸ்தானின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதிலும் சீனா உறுதியாக ஆதரிக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்