தனியாக இருக்கும் பெண்களிடம் சில்மிஷம்..! தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் | Krishnagiri

x

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுத்துகாரன் கோட்டை பகுதியில், தனியாக செல்லும் பெண்களிடம் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், தட்டிக்கேட்கும் பெண்களை ஆயுதங்களால் தாக்கி நகைகளை பறித்து செல்வதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளன. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, சம்பவத்தில் ஈடுபட்டது மடத்துனூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. முருகனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி விட்டு சென்ற விரக்தியில் இது போன்ற சில்மிஷங்களில் அவர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, முருகனை தேடி வந்த போலீசார், ஜாதிநாயக்கன் கொட்டாய் பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். விசாரணையில் முருகன் அனைத்தையும் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொண்ட போலீசார், பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்